வருகைக்கு நன்றி!!!

இத்தொகுப்பு பற்றிய தங்களின் கருத்துக்களை மறவாமல் இவ்விணையத்தில் பகிரவும்.. மேலும் இவை மற்றவர்களுக்கு பயன்படும் என்று கருதினால், பயனடைவோர்க்கு கடுகளவும் சிந்திக்காமல் சிதறச்செய்யவும்...

சதுரகிரி சுந்தர / சந்தன மகாலிங்கம்

January 22, 2011


சிவன்மலை, மூலிகை தோட்டம், சித்தர்கள் மலை எனப்பல பெயர்களால் அழைக்கப்படும் மலைக்கோவில் தான் அருள்மிகு சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில். இக்கோவில், மேற்கு தொடர்ச்சி மழையின் ஒரு பகுதியான வத்றாயிருப்பு (watrap) பகுதியில் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஒரு நுளைவுவாயிலும், வரசரநாடு மற்றும் சாப்டூர் வழியிலுமாக மொத்தம் மூன்று பாதைகளை (மலைபதையாக) கொண்டுள்ளது. பதினென்ன சித்தர்கள் வாழும் மலை. அமாவாசை மற்றும் பிரதோஷம் தேதிகளில் விஷேச பூஜையுடன் பக்தர்கள் கூட்டத்தையும் காணலாம். ஆடி மற்றும் தை அமாவாசையில் வரும் பக்தர்கள் படையினை எண்ண இயலாது. அடிவாரத்தில் இருந்து ஏழு மைல் உயரத்திற்கு மலை பாதையில் நடந்து சென்று சிவன் தரிசனம் பெரும் மக்கள் அடையும் ஆனந்த பரவசத்தையும், சிவபெருமானை கண்ட திருப்தியில் திரும்பும் பக்தர்களை காணும் போதும் நாம் கடக்கும் பாதை மிகநீளமாக தெரிவதில்லை. பாதை முழுவதும் கல், பாறை, மரவேர், வழுக்குபாறை, சமவெளி, நீரோட்டம் எனக் கரடு முரடாக இருப்பினும் அயராது நடந்து சென்று மக்கள் சிவபெருமானின் தரிசனம் பெறுகின்றனர். மழைக்காலங்களில் நீரோட்டத்தோடு இப்பாதை காட்சியளிக்கும். அதில் குளித்து நீராட, வசதியாக சில பாறைகள் இயற்கையாய் அமைந்திருக்கும்.


இவற்றிக்கும் மேல் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, வழிநெடுக இலவசமாக உணவு, நீர் மற்றும் ஊககப்போருட்கள் தரும் பக்தர்களிடம் மனிதநேயத்தை மறைமுகமாகவோ / வெளிப்படையாகவோ காணலாம். மேலும் இரவில் அடர்ந்த காட்டில் தங்க விரும்பும் பக்தர்களுக்கு, இலவசமாக எந்த எதிர்பார்ப்புமின்றி வழங்கப்படும் இடமும், உணவும், கவனிப்பையும் சொல்ல வார்த்தைகள் கிடையாது... அமாவாசை தேதியில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு, டி மற்றும் காபி வழங்க தனியாகவே சில அமைப்புக்கள் கட்டிடம் அமைத்து சேவை புரிகின்றது. இச்சேவையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், உணவோ அல்லது தின்பண்டங்களோ எட்டிய இடத்தில கிடைக்காத காட்டுப்பகுதியில், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஊர்களில் வாங்கி, அவற்றை மலை உச்சிக்கு எடுத்து சென்று, சமைத்து மக்களுக்கு தரத்தில் குறைவின்றி இலவசமாக இன்முகத்தோடு அளிக்கின்றனர்.

இவ்வாறு சிவனை தரிசிக்க வரும் மக்களின் எண்ணிக்கையும், வரும் வழியில் அவர்கள் தொய்வின்றி பயணம் செய்ய உதவும் அமைப்புகளை காணும் போதே நாம் வியக்கின்றோம் என்றால் அச்சிவனின் பெருமை எத்தகையானதாக இருக்க கூடும்? ஆம், உங்கள் சிந்தனைக்கு பதில் இன்னும் உங்களை ஆச்சரியமூட்டும் .

தரையிலிருந்து 14 கி.மீ உயரத்தில் இருக்கும் சிவன் கொவிக்குசெல்ல நாம் ஏழு மலைகளை தாண்டிச்செல்ல வேண்டும். செல்லும் வழியில், விநாயகர், மாரியம்மன், ரெட்டை லிங்கம், துர்க்கை அம்மன், பலாடிகருப்பசாமி (பலாப்பழ மரத்தடி) எனப்பல சிறுசிறு ஆலயங்களையும் காணலாம். பலாடி கருப்பசாமி கோவிலுக்கு மேல் சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் என இரு ஆலயங்கள் அமைந்துள்ளன. இவை இரண்டிற்கும் தனித்தனி வரலாறு உண்டு.

சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில், சிவலிங்கம் சாய்வான வடிவில் அமைந்திருக்கும். சந்தன மகாலிங்கத்தில் சிவலிங்கம் சந்தனத்தால் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். சந்தன மகாலிங்கத்தில், பத்தினெட்டு சித்தர்களின் திருவுருவச்சிலைகள் அழகாய் அமைந்திருக்கும். மேலும், சந்தன மகாலிங்கம் கோவிலில், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் சன்னதியும் அமைந்திருக்கும். சுந்தர மகாலிங்கத்தின் அழகைகாணவும், அருளை பெறவும் கூடும் கூட்டத்தின் அர்த்தத்தை கோவில் சென்று திரும்பிய பின் நம் அனைவராலும் உணர முடியும். அத்தனை நிம்மதி மற்றும் தெளிவும் நம் மனதில் காணலாம். சந்தன மகாலிங்கம் ஆலயத்தில் வற்றாத ஆகாய கங்கை தீர்த்தம் வலிந்தோடும். இத்தீர்த்தம் பல மூலிகை செடிகளை கடந்து வருவதால், பருகுவோர்க்கு எந்த நோய் இருந்தாலும் குணமடையும் என்றுரைக்கின்றார்கள்.

இவ்விரு ஆலயத்திற்கு மேலே பெரிய மகாலிங்கம் அமைந்துள்ளது. பெரிய மகாலிங்கம் சென்று தரிசிக்க பலர் செல்வதுண்டு. அனால், அப்பாதை மிகவும் அபயம் நிறைந்ததாக கூறப்படுவதுண்டு. காரணம், அடர்ந்த காடு மற்றும் காட்டு விலங்குகளின் நடமாட்டமும். மேலும், தவசிப்பாரை - சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் செல்லும் பாதையை இரண்டாய் பிரிக்கும் மையத்தில் நின்று பார்த்தால், எதிரில் உள்ள மலையின் உச்சியில் தெரியக்கூடியது. நன்றாக உற்று நோக்கினால் அங்கும் சில மனிதர்களின் நடமாட்டத்தை காணலாம். அமாவாசை இரவுகளில் சித்தர்கள் இங்கு பூஜை நடத்துவதாக கூறப்படுவதுண்டு. அங்கும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

கோவில் செல்லும் வழியில் இருக்கும் அடர்ந்த காட்டு பகுதி, மேற்கு தொடர்ச்சி மழையின் இயற்கை வளத்தை எடுத்துரைக்கும். இம்மலைககாட்டில் எங்கும் கிடைக்காத மூலிகை பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சித்தர்கள் மூலிகை தேடி இக்காட்டிற்கு வந்து, பின் இங்கு குடி கொண்டு சிவனை வழிபடுவதாகவும் கூறப்படுகிறது.

இங்கு மாவூத்து என்னும் இடமும் சிறப்பு பெற்றது. தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சற்று தூரம் சென்றால் இக்கோவிலை தரிசிக்கலாம்.

படங்கள் உங்களுக்காக!!! இங்கு நான் சுந்தர / சந்தன மகாலிங்கம் மற்றும் காட்டுவழிப்பாதையின் அழகையும் படம் பிடித்துள்ளேன். பார்த்து, ரசித்து உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து செல்லவும். நன்றி!!!
 

கன்னியாகுமரி

January 22, 2011


கன்னியாகுமரி
- பார்த்து, ரசித்து அனுபவிக்க உகந்த ஒரு சுற்றுலாத்தளம். கடல், கோவில், விவேகனந்தர் பாறை, காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலை எனப்பல இடங்கள் உள்ளன. மேலும் நாகர்கோவில், திருவனந்...

Continue reading...
 

அழகர் கோவில்

December 1, 2010

இன்று மதுரை மக்களின் ஒரு முக்கிய போழுதுபோக்குத்தளம்... மக்கள் போற்றும் ஒரு புன்னியதலத்தை  நான் இவ்வாறு கூறக்காரணம், காதல் என்னும் பேரில் கபடமாடும் நயவஞ்சகர்கள் ஒதுங்கும் ஒரு சத்திரம�...


Continue reading...
 

தேக்கடி

December 1, 2010
மதுரையில் இருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய, இயற்கை அம்சம் கொண்ட இரம்மியமான ஒரு சுற்றுலாத்தலம். கேரள, தமிழக எல்லை என்றும் கூறலாம். குமுளி என்கிற இடத்தில அமைந்துள்ளது. மதுர�...

Continue reading...
 
Since 13-Nov-2010
 
Make a Free Website with Yola.