இன்று மதுரை மக்களின் ஒரு முக்கிய போழுதுபோக்குத்தளம்... மக்கள் போற்றும் ஒரு புன்னியதலத்தை  நான் இவ்வாறு கூறக்காரணம், காதல் என்னும் பேரில் கபடமாடும் நயவஞ்சகர்கள் ஒதுங்கும் ஒரு சத்திரமாக, கூடி கூத்தடிக்க ஒரு ஒதுக்குபுறமாக  இவ்விடம் மாற்றப்பட்டதால்!!! எனினும் இங்குள்ள இயற்கை வளம், கோபுரத்தின் கலை நுணுக்கம், அறிய மூலிகைகள், மலையேறி செல்லும் காட்டு பாதை, வழியில் நாம் காணும் காட்டு எருமைகள், குரங்குகள், தமிழ் கடவுளாம் முருகனின் அறுபடை வீட்டில் ஒன்றாம் பழமுதிர்சோலை, அங்கு தரும் பிரசாதம், நூபுர கங்கையாம் ராக்காயி அம்மன் கோவில் கிடைக்கும் தீர்த்தம், அழகரின் அழகு முகம்,  கோவில் உருவான வரலாறு போன்ற சிறப்பினை  காண்போரின் மனதில் என்றும் நிழலாடும்...

மதுரையின் எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்குச்செல்ல பெரியார், மாட்டுத்தாவணி  போன்ற பேருந்து நிலையத்தில் இருந்து அதிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவிலின் சிறப்பம்சம் என பல உண்டு. என் பார்வையில் வைணவ, சைவ திருக்கோவிலை ஓர் இடத்தில் நாம் காணலாம்... வரும் மக்களின் பலர் இரு தளங்களுடன் இராக்காயி  அம்மன் கோவிலையும் தரிசித்து செல்கின்றனர்.. மேலும் அழகர் அடிவாரத்திலும், முருகனும், அம்மனும் மலைமேல் இருப்பதாலும் பயனர்களின் வசதி கருதி அடிவாரத்திலிருந்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன..

கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.

மதுரையிலிருந்து 21 கி.மீ. தூரத்தில் இருகின்றது அழகர் மலை. கிழக்கு மேற்காக 18 கி.மீ. நீளமும் 320 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை "திருமாலிருஞ்சோலை , உத்யானசைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி" முதலிய பெயர்களால் அழைக்கப்படுகிறது...

படங்கள் உங்களுக்காக!!!

குறிப்பு: இதில் நான் செல்லும் பாதையை அதிகமாக படம்பிடித்துள்ளேன். பின்னாளில் இன்னும் பல இரம்மிய படங்களை இணைப்பேன்...