மதுரையில் இருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய, இயற்கை அம்சம் கொண்ட இரம்மியமான ஒரு சுற்றுலாத்தலம். கேரள, தமிழக எல்லை என்றும் கூறலாம். குமுளி என்கிற இடத்தில அமைந்துள்ளது. மதுரை, திருவனந்தபுரம், கம்பம், தேனி போன்ற பகுதியில் இருந்து குமுளி செல்லும் பேருந்தில் சென்றால் இவ்விடத்தை அடையலாம். இங்க இருக்கிற மிகப்பெரிய விஷயமே பெரியார் வனவிலங்கு சரணாலயம் தான். இங்குள்ள ஏரியில் (lake ) படகு சவாரி செய்வதற்கு வரும் கூட்டம் ஏராளம்..சுமார் 14 கி.மீ தூரம் ஏரியில் பயணித்து சில வணபகுதிகளை காணலாம்!!!அனால் நான் சென்ற தருணத்தில் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. இங்கே ஆணை, புலி எல்லாம் தண்ணீர் அருந்த வரும் என்று எதிர்பார்த்து நிற்கும் கூட்டமும் உண்டு... முன்பு அவை வந்தன, இப்போது மக்களின் நடமாட்டத்தால் அவை தனது நடமாட்டத்தை சுருக்கிகொண்டன :) ..இச்சரனாலயத்தின் பரப்பளவு 777 கி.மீ. காணும் எடமுங்கும் பச்சைபசேல் என்று காட்சிதரும் இவ்விடத்தில் மிளகு போன்ற தானியங்கள் கிடைக்கின்றன!!!

படங்கள் உங்களுக்காக!!!

குறிப்பு: இதில் இயற்கையை விட நான் என் நண்பர்களுடன் எடுத்த படங்கள் தான் அதிகம் உள்ளன... பின்னாளில் இதை நான் குறைத்துகொள்கிறேன்...