கன்னியாகுமரி
- பார்த்து, ரசித்து அனுபவிக்க உகந்த ஒரு சுற்றுலாத்தளம். கடல், கோவில், விவேகனந்தர் பாறை, காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலை எனப்பல இடங்கள் உள்ளன. மேலும் நாகர்கோவில், திருவனந்தபுரம் பகுதியை ஒட்டி உள்ளத்தால் கேரள வாடை இங்கு கொஞ்சம் அதிகம். மதுரை மற்றும் ராஜபாளையம் பகுதியில் இருந்து பேருந்து வசதிகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. மதுரையிலிருந்து சுமார் 4  மணிநேர பயணத்தில் நான் இவ்விடத்தை அடையலாம்.


இங்கு நாம் பலவண்ணங்களில் மணல் இருப்பதை காணலாம். சிவன், பார்வதி திருமணத்தின் பொது பார்வதி கோவத்தில் தட்டில் இருந்த நவதானியங்களை தட்டி விட்டார். அந்த நவதானியங்கள் இன்று பல வண்ணங்களில் மணல் இருப்பதற்க்கான சான்று என்பது புராணங்களின் கூற்று.

மேலும், இங்கு சூர்ய உதயத்தையும், அஸ்தமனத்தையும் காண கூடும் கூட்டம் அதிகம். அதிகாலை 4  மணிமுதல் மக்களின் ஆர்வத்தை நம்மால் உணர முடியும். பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. 133 அடி உயரத்தில் வானம் தொடும் அளவு உயர்ந்திருக்கும் சிலை நம்மை பிரமிக்க வைக்கிறது, திருவள்ளுவரின் புகழை பறை சாற்றுகிறது. படகு சவாரி செய்து விவேகனந்தர் பாறை அடைந்து அமைதி தேடி வரும் மக்களும் அதிகம். அதில் கிடைக்கும் சுகமும், மனதில் உதிக்கும் ஆனந்தமும், ஆச்சரியமூட்டும் நுணுக்கமும் சொல்லில் அடங்காது.

படங்கள் உங்களுக்காக!!!

நான் அங்கே சுட்ட படங்களை உங்களுக்காக பகிர்கின்றேன். பார்த்து உங்கள் கருத்துக்களையும் பரிமாறவும்... நன்றி!!!