ஆண்கள் மாடர்ன் டிரஸ்  பண்ணும் அணைத்து பெண்களையும் குறை கூறுவதில்லை....அணியும் உடையில், இலை மறை காயாக தெரியும் பாகங்களை அப்பட்டமாக வெளி காட்டும் பெண்களை தான் குறை கூறுவார்கள்... மேலும், அவர்கள் மாடர்ன் டிரஸ் பெண்களை மட்டும் அல்ல, சேலையை சரியாக கட்டாத பெண்களையும் தான் குறை கூறுவார்கள்...

ஆண்கள் வேஷ்டி கட்டும் பழக்கம் குறைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான்... அனால் அவர்கள் அணியும் பேண்ட் / ஷர்ட், டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் ஏனைய உடைகள் நாகரீகமாக, அதாவது அவர்களை  கேவலமாககவோ / கிளிர்ச்சி ஊட்டும் வகையில் இருப்பின் அவனை பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கேவலமாக தான் குறை கூறுவார்கள்...

உடை அணிவதில் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்... அணியும் உடை நம்மை அழகாக காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தை விட, மக்களுக்கு கவர்ச்சியாக காட்ட வேண்டும் என்கிற எண்ணம் தான் நம்மில் மேலோங்கி உள்ளது...

கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான்!!!