அக்கறைக்கு இக்கரை பச்சை - இந்தியா / அமேரிக்கா
Posted by Prabhakaran Manoharan on Saturday, January 1, 2011
Under: Common
'அமேரிக்கா'ன்னால்லே எல்லாரும்
ரொம்ப பெருசா சொல்றாங்களேன்னு நானும் அது ரொம்ப பெரிய ஊருன்னு
நேனச்சுக்குட்டு இருந்தேன்... போய் பார்த்த பிறகு தான் எனக்கு புரிஞ்சது
நம்ம இளையராஜா பாடிய பாட்டுள்ள எவ்ளோ அர்த்தம் இருக்குன்னு!!!!
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போலாகுமா!!!! அப்பப்ப எவ்ளோ உண்மையான வரிகள்....
மொத நல்லாதாங்க இருக்கும்... அப்புறம் தான் தெரியும் அங்கிருக்குற வண்டவாளம்...
வித்தியாசம்: இந்தியா / அமேரிக்கா
வாழ்க்கை முறை:
இங்க எதுவெல்லாம் நம்ம சுதந்திரமா செய்ரோமோ அதெல்லாம் அங்க செய்யகூடாது..
(எ.டு) => ரோட்டுல ஒரு நல்ல இயற்கை அம்சமான இடம் பார்த்தா நின்னு பார்ப்போம்ல, அத அங்க பண்ண கூடாது.. :) (இது ரொம்ப கஷ்டமான விஷயம் நமக்கு)
நினைச்ச இடத்துல்ல குப்பை கொட்றது, எச்சில் துப்புவது (நம்ம கண்டிப்பா மாத்திக்கணும் - இது நல்ல விஷயம், இங்கயும் பழக்கபடுத்தலாம்...)
அதே போல இங்க நம்ம என்னல்லாம் செய்ய யோசிப்போமா அத சுதந்திரம் செய்யலாம்...
(எ.டு) => நடுரோட்டுள்ள முத்தம் குடுக்குறதுள்ள இருந்து ------------- ...:)
கஷ்டமான விஷயம்:
சுதந்திரமா ஊர் சுத்த முடியாது, யார்ட்டையும் நல்லா மனசு விட்டு பேச முடியாது, நல்லபஸ் வசதி கிடையாது, பொது தொலைபேசி நிலையத்தை பார்க்க முடியாது, அப்புறம் முக்கியமா கடைவீதி - எல்லா இடத்துலையும் பார்க்க முடியாது:(
சிறப்பான விஷயம்:
அழகான பாதை - வடிவமைப்பு மற்றும் நிர்வாகம் அசத்தல் - நம்ம நாட்டுலயும் நடந்துக்கிட்டுருக்கு, விரைவில் எதிர் பார்க்கலாம்னு நினைக்குறேன்!!!
போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் உயிர் காக்கும் சேவை - அமோகம்
மற்றவை:
அப்புறம் அங்க அதிகமா இருக்குறது சீனா மக்கள், இரண்டாவது நம்ம மக்கள் தான் :) எங்க போனாலும் இந்தியன்ன பார்க்கலாம் அதுலயும் ஆந்திரா மற்றும் தமிழ் மக்கள் அதிகம்... சம்பளம்னு பார்த்தீங்கன்னா ஆசிய மக்கள் தான் அமெரிகன்ன விட அதிகமா வாங்குறான்...அங்க ஒரு சட்டம் இருக்கு என்னன்னா, ஒரு அமெரிக்கன் ஒரு வேலைய பார்த்தா அவனுக்கு மத்த நாட்டுக்காரங்களுக்கு கொடுக்குறதை விட அதிகமா தரணும்னு (எல்லாரும் ஒரே படிப்பு படிசுருந்தாங்கன்னா)... இதுல்ல இருக்குற ஒரு விஷயம் தான் நம்மள முன்னால கொண்டுவருது.. என்னன்னா அவனுங்க பத்தாம் வகுப்பு தாண்டுரதே பெரிய விஷயம். ஆனா நம்மாளுங்க போகும்போது ஒரு டிகிரி கூட தான போறானுங்க, அதனால சம்பளத்துல அவனுங்கள அடிசுரானுங்க...
அப்புறம் ஓர் முக்கியமான விஷயம், அங்க பத்தாம் கிளாஸ் வர ஒருத்தன் படிப்பு செலவ அரசாங்கம் எடுத்துக்கிறது (படிப்பறிவ கூட்டுறதுக்கு).. நம்ம ஊரு கட்டாய கல்வி மாதிரி, நம்ம மதிய உணவு மற்றும் போக்குவரத்து வசதியோட கல்வி தரானுங்க!!! நம்ம ஊர்ல இருந்து ஏகப்பட்ட விஷயம் எடுத்துருபானுங்க...
என்னதான் இருந்தாலும் நம்ம ஊர்ல இருக்குற வசதி தனி தாங்க... பெற்றோரின் கவனிப்பு, சொந்தங்களின் உபசரிப்பு, நண்பர்களின் நாடி துடிப்பு இதெல்லாம் அங்க இருக்காதுங்க... சும்மா ஊருள்ள வசதி மட்டும் கூட்டிட்டு நிம்மதி, சந்தோசத்த புதைச்சுருப்பானுங்க... அந்த வசதியும் நம்ம நாட்டுள்ள கூடிய சீக்கிரம் வந்துரும்.. அப்புறம் நம்ம தாங்க ராஜா!!!
நினைவு சின்னம்னு ஊர் பூராம் நிறைய கட்டி வச்சிருப்பானுங்க... அது போல நம்மக்கிட்ட நிறைய இருக்கு... அப்புறம் நியூயார்க் நகரத்த பார்தீங்கன்னா நம்ம மீனாட்சி அம்மன் கோவில் சுத்தி வர அளவுதான் இருக்கும்.. என்ன இங்க கோவில், அங்க கட்டிடம்... வேற ஒன்னும் பெருசா எனக்கு அங்க எதுவும் தெரியலங்க... என்ன நம்ம எல்லாம் வச்சுக்கிட்டு வெளிய தெரியாம இருக்கோம், அனா அங்க இருக்குறதயே பெருசா காட்டி பெயர வாங்குறாங்க... விளம்பரம் இல்லன்னா கடைக்கு மட்டும் இல்லைங்க நாட்டுக்கு பெயர் கிடைக்காதுபோல :(
கொடுமையான தகவல்:
இப்ப நம்ம ஊரு மக்கள் அவன் வாழ்க்கை இனிப்புன்னு அவனை பின்பற்றுறோம். ஆனா அவனோ நம்மள பின்பற்றுறோம்...
அக்கறைக்கு இக்கரை பச்சை தானோ!!!

In : Common
Tags: "அக்கறைக்கு இக்கரை பச்சை"
blog comments powered by Disqus